தோல்வி பயத்தில் திமுகவினர் ரகளை; ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு

Sep 23, 2021 08:06 AM 1802

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்யவதற்கான நேரம் முடிவடைவதற்கு முன்பே, அதிமுகவினரின் வேட்புமனுக்களை அதிகாரிகளை வாங்க விடாமல் திமுக மாவட்டச் செயலாளர் மிரட்டி ரகளையில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. மாலை 4:40 மணி அளவில் அதிமுக வேட்பாளர் கோவிந்தன் மனுத்தாக்கல் செய்ய சென்றுள்ளார். அப்போது, திமுக மாவட்ட செயலாளர் தேவராஜ் மற்றும் 50-க்கும் மேற்பட்ட திமுகவினர், அதிமுக வேட்பாளரின் மனுவை பெறவிடாமல் அதிகாரியை தடுத்து மிரட்டியுள்ளனர். இதனால், அதிமுக மற்றும் திமுக-வினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  

இதனிடையே, ரகளையில் ஈடுபடும் திமுகவினர் மீது, காவல்துறையினர் நடவடிகைக எடுக்காமல், ஒரு தலைபட்சமாக, அதிமுக எம்எல்ஏ செந்தில்குமாரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 

Comment

Successfully posted