டெல்லி , குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

May 26, 2020 12:28 PM 228

டெல்லி துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் 2 ஆயிரம் குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

துக்ளகபாத் பகுதியில் உள்ள ஒரு குடிசையில் ஏற்பட்ட தீ, மற்ற குடிசைகளுக்கும் பரவத் தொடங்கியது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில், சுமார் 2 ஆயிரம் குடிசைகள் எரிந்து சேதமடைந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். உயிர்ச்சேதம் மற்றும் சேதங்கள் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை. தீ விபத்துக்கான காரணங்கள் மற்றும் சேதங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted