விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்

Aug 08, 2020 05:43 PM 550


கேரள மாநிலத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம், கேரள மாநிலம் கோழிகோட்டில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்ததாக கூறியுள்ளார். மேலும், இக்கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள துணை முதலமைச்சர், சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted