அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் இன்று தேர்தல் பிரசாரம்

Mar 24, 2019 06:41 AM 739

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்.

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு திருப்போரூர் சுப்ரமணிய சுவாமி கோவில் அருகில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் அவர், காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

இதனைத்தொடர்ந்து செய்யூர் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted