"மாணவர்கள் எதையும் துணிந்து எதிர்கொள்ள வேண்டும்" ஜோதி ஸ்ரீ துர்கா மறைவுக்கு துணைமுதலமைச்சர் இரங்கல்

Sep 12, 2020 04:43 PM 2786

மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை செய்துகொண்ட துயரச்செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மாணவியின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத் தூண்களாகிய மாணவச்செல்வங்களின் இதுபோன்ற விபரீத முடிவுகள் மிகுந்த துயரத்தை அளிப்பதாகவும், மாணவச் செல்வங்கள் மனம் தளராமல் எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பெற்றோர்களும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Comment

Successfully posted