கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கவுள்ள இடத்தில் ஆய்வு துணை முதலமைச்சர் நேரில் ஆய்வு

Aug 04, 2020 08:33 PM 1038

தேனியில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமையவுள்ள இடத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேனி மாவட்டத்தில் 265 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கவுள்ளதாக முதலமைச்சர் அறிவித்து அதற்கான நிதியை உடனடியாக ஒதுக்கி உத்தரவிட்டார். இதனிடையே தப்புக்குண்டு சட்டக்கல்லூரியில் இருந்து மிக அருகில் 228 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது மருத்துவக் கல்லூரி துணைவேந்தர், மாவட்ட ஆட்சியர் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

 

Comment

Successfully posted