திண்டுக்கல்லில் தொடரும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் அச்சம்

Sep 24, 2021 12:03 PM 1103

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், உணவக ஊழியரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நகரில் தொடரும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

புதுக்கோட்டை பொன்னமராவதியை சேர்ந்த உணவக ஊழியரான முத்து கணேசன் என்பவர், பணி முடித்து விட்டு பொன்னமராவதி செல்வதற்காக திண்டுக்கல் பேருந்து நிலையம் வந்துள்ளார்.

அப்போது, இரண்டு மர்ம நபர்கள், முத்து கணேசனை கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்றனர். முத்து கணேசனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு கூடிய அப்பகுதி மக்கள், அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இரண்டு மர்ம நபர்களும் தப்பிய நிலையில், படுகாயமடைந்த முத்து கணேசனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

திண்டுக்கல்லில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்கு கொடூர கொலைகள், மூன்று கொலை முயற்சிகள் மற்றும் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

இதனால், திண்டுக்கல்லில் சட்டம் ஒழுங்கு கேள்விகுறியாகியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Comment

Successfully posted