தாவூத் இப்ராஹிமுடன் நேரடித் தொடர்பு - இலங்கை தாதா கட்டகாமினி கைது!

Oct 14, 2020 06:08 PM 2074

நிழல் உலகத் தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நேரடித் தொடர்பில் இருந்த இலங்கையை சேர்ந்த தாதா பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் நிகழ்ந்த பல்வேறு கொலை சம்பவங்கள் தொடர்பாக கட்டகாமினி என்ற பொன்சேகா என்பவரை இலங்கை காவல்துறையினர் தேடி வந்தனர். நிழல் உலகத் தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் பொன்சேகா தொடர்பில் இருந்ததால் அவரை வலைவீசி தேடி வந்தனர்.

தமிழகத்திற்கு தப்பி வந்த கட்டகாமினி, காஞ்சிபுரம் அருகே புதுபாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 6 மாதமாக தங்கியுள்ளார். இலங்கை காவல்துறை கேட்டுக்கொண்டதின் பேரில் கட்டகாமினியை காஞ்சிபுரம் கியூ பிரிவு காவலர்கள் பிடிக்க முயன்றனர். காவலர்கள் தன்னை நெருங்கியதை அறிந்த அவர் பெங்களூருக்கு தப்பினார். இதையடுத்து கட்டகாமினியை பின்தொடர்ந்த காஞ்சிபுரம் கியூ பிரிவு காவலர்கள் பெங்களூருவில் வைத்து அவரை அதிரடியாக கைது செய்தனர்.

Comment

Successfully posted