அமெரிக்க ஓபன் - அரையிறுதிக்கு ஜோகோவிச் தகுதி

Sep 10, 2021 07:41 AM 15447

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் தகுதிப் பெற்றார்.

காலிறுதியில் இத்தாலியின் பெரெட்டினியை எதிர்கொண்ட அவர், வழக்கம் போல் முதல் செட்டை எளிதாக கோட்டைவிட்டார். அதன் பின் சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அடுத்தடுத்து மூன்று செட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.

இறுதியில், 5க்கு 7, 6க்கு 2, 6க்கு 2, 6க்கு 3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடக்கும் அரையிறுதி போட்டியில், உலகின் நான்காம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்ட் ஸ்வெரெவ் அவர் எதிர்கொள்கிறார்.

Comment

Successfully posted