நியாயவிலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!- சம்பள பிடித்தம் செய்யப்படும் என அரசு எச்சரிக்கை!

Aug 09, 2020 07:33 PM 1370


வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படும் என, கூட்டுறவுத்துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அதில், நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளதாகவும், எனவே பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடை பொருட்கள் தடையின்றி கிடைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comment

Successfully posted