இறுதிப் பருவத் தேர்வுகள் : செப் 22ஆம் தேதி முதல் தொடக்கம் - அண்ணா பல்கலைக்கழகம்

Sep 13, 2020 12:39 PM 4697

இறுதிப் பருவத் தேர்வுகளில் அரியர் வைத்திருக்கும் பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் வரும் 22-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2019-2020-ம் கல்வியாண்டுக்கான இறுதி பருவத் தேர்வுகள் வரும் 22-ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் 2013-ம் ஆண்டுக்குப் பின் இறுதி செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெறாமலேயே படிப்பை முடித்துள்ள மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளும் வரும் 22-ம் தேதி முதல் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. செப் 22-ம் தேதி Project மற்றும் Viva - Voce தேர்வும், செப் 24 ம் தேதி முதல் எழுத்துத் தேர்வுகளும் நடைபெறும் என்றும் Project, Viva - Voce மற்றும் Theory தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான கால அட்டவணை மற்றும் பயிற்சித் தேர்வு தொடர்பான விவரம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தேர்வுக்கு இதுவரை பதிவு செய்யாதவர்கள் வரும் 15 முதல் 17-ம் தேதி வரையிலான நாட்களில் பதிவு செய்யலாம் என்றும் 2012-ம் ஆண்டுக்கு முன்பு பி.இ., சேர்ந்த மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted