மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து

Jan 12, 2020 06:33 AM 463

மஹாராஷ்டிரா மாநிலத்தில், ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் போய்சாரை அடுத்துள்ள, கொல்வாடே கிராமத்தில் ஆங்க் பார்மா என்ற நிறுவனம் அமைந்துள்ளது.  மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழக வளாகத்தில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில், நேற்று மாலை திடீரெனெ தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தீயில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரசாயனங்கள் பரிசோதனையின்போது தீவிபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், தீ விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்குவதாக மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

Comment

Successfully posted