வலையில் 40 கிலோ வரை சிக்கிய மீன்கள்: மீனவர்கள் மகிழ்ச்சி

Dec 09, 2019 05:48 PM 657

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் வலையில் அதிகளவில் காலா மீன்கள் பிடிபட்டுள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

வேதாரண்யத்தில் புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் பைபர் படகு மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2 தினங்களாக கடல் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தநிலையில், தற்போது கடல் சீற்றம் குறைந்து மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு தயாராகியுள்ளனர். இதனால், காலா மீன்கள் வரத்து அதிகமாக உள்ளதாகவும், தற்போது ஒரு படகிற்கு 20 கிலோ முதல் 40 கிலோ வரை காலா மீன்கள் கிடைப்பதாக மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.Comment

Successfully posted