திருப்பதியில் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 பேர் கைது

Dec 13, 2019 09:05 AM 126

திருப்பதியில் கொள்ளை மற்றும் ஏமாற்றுதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்த 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்...

திருப்பதியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாபுராவ் பூபால், கொள்ளை, ஏமாற்றுதல், ரைஸ் புல்லிங் செய்து ஏமாற்றுதல் குற்றங்களுக்காக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து 49 லட்சத்து 25 ஆயிரத்து 100 ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் 179 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும், பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காகவும் 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்..

 

Comment

Successfully posted