முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.கோவை தங்கத்தின் மருமகன் மீது புகார்

Jul 28, 2021 08:07 AM 2669

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி குழந்தை பிறந்தவுடன் 7 கோடி ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக, முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோவை தங்கம் மருமகன் மீது, பாதிக்கப்பட்ட பெண் டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

கோயம்புத்தூரை சேர்ந்த சிந்துஜா என்பவர் அப்பகுதியில் ஹாட் சாக்லேட் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். திருமணமாகி விவாகரத்து பெற்ற சிந்துஜாவுக்கு, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்துகொள்வதாக அருண் பிரகாஷ் நம்பிக்கையளித்த நிலையில், இருவருக்கும் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், நம்பிக்கை அளித்தப்படி திருமணம் செய்யாமல், சுமார் 7 கோடி ரூபாய் அளவிற்கு அருண்பிரகாஷ் மோசடி செய்து விட்டதாக, டிஜிபி அலுவலகத்தில் சிந்துஜா புகாரளித்துள்ளார். 

image

தன்னையும் தனது குழந்தையும் கைவிட்ட அருண் பிரகாஷ், கொலை மிரட்டல் விடுத்து மிரட்டி வருவதாகவும், சிந்துஜா புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக, கோவை புலியகுளம் மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அருண் பிரகாஷை விசாரணை செய்ததில், 65 லட்சம் ரூபாய் மட்டுமே தருவதாக பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சிந்துஜா தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted