சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் உயர்வு

Aug 15, 2018 02:43 PM 278
சென்னை கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்த பின்னர் உரையாற்றிய முதலமைச்சர்,  சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் 6 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து, 7 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார். சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் 13 ஆயிரம் ரூபாயில் இருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு, பொதுத்துறை நிறுவனங்களில் 2 சதவீத உள்ஒதுக்கீடு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னிலை வகிப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.

Comment

Successfully posted