மதுரையில் முழு ஊரடங்கு நீட்டிப்பு!

Jul 05, 2020 09:25 PM 3764

மதுரையில் தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கு, நாளை முதல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மேலும் 7 நாட்களுக்கு, அதாவது நாளை முதல் 12ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு, ஊரடங்கை அமல்படுத்தினாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இந்த நோய் பரவலை தடுக்க இயலாது என்று தமிழக அரசு கூறியுள்ளது. 

Comment

Successfully posted