காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு

Mar 18, 2020 03:02 PM 2553

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்காக நிலம் எடுக்கும் பணிக்கு, தமிழக அரசு முதல் கட்டமாக 800 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின் மீது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் இதனை கூறினார். முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பேபி அணையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேரவையில் முதலமைச்சர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து, பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக, சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

Comment

Successfully posted