தம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு - அரசுக்கு நன்றி!

Jul 03, 2020 05:33 PM 788

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கவுள்ளதால், சிற்பிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக தம்மம்பட்டியில் மரசிற்ப வேலைகள் நடைபெறுகிறது. இங்கு செய்யப்படும் சிலைகள் தத்ரூபமாக காட்சியளிக்கும் என்பதால், மக்களிடம் வரவேற்பு உள்ளது. ஒரு புகைப்படத்தை கொடுத்தால், அதன் வடிவிலேயே சிலைகளை வடிவமைத்து தருவதற்கும் கை தேர்ந்த மரச்சிற்பிகள் உள்ளனர். இந்நிலையில் தம்மம்பட்டி மரச் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சிற்பிகள், முழு ஒத்துழைப்பு வழங்கிய மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted