கொரோனா தடுப்புப் பணிகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

Sep 18, 2020 01:41 PM 2509

2021 தேர்தலிலும் அதிமுக அரசு மகத்தான வெற்றிபெற்று ஹாட்ரிக் சாதனைப் படைக்கும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ள மாநகராட்சி ஊழியர்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக மேற்கொண்டுள்ளதாக் கூறினார். கொரோனா பாதித்த இந்த பேரிடர் காலத்திலும், வளர்ச்சித்திட்டங்கள், வேளாண்பணிகள், தொழில் முதலீடுகளை ஈர்ப்பது போன்றவை தடைபடாமல் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். இதன்மூலம் அதிமுக அரசு மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாகவும், 2021ம் ஆண்டிலும் அதிமுக சிறப்பான வெற்றிபெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்றும் கூறினார்.

Comment

Successfully posted