திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

Apr 17, 2022 10:02 AM 66257

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நடைபெற்ற அரசு விழாவில் திமுக எம்எல்ஏ-வின் சகோதரரை மேடையில் அமர வைத்து அதிகாரிகள் ராஜமரியாதை வழங்கியதுஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒசூரில், இலவச மின் இணைப்பு பெற்றவர்கள் கலந்து கொள்ளும் அரசு விழா நடைபெற்றது. மேடையில் ஒசூர் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி, ஒசூர் தாசில்தார் கிருஷ்ண மூர்த்தி, துணை மேயர் ஆனந்தய்யா உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

மேலும் திமுக மாமன்ற உறுப்பினர்களின் கணவன்மார்களும், ஒசூர் திமுக எம்எல்ஏ பங்கேற்காத நிலையில், அவரின் உடன்பிறந்த அண்ணன் சந்திரனும் மேடையில் அமர வைக்கப்பட்டார்.

அப்போது, எம்எல்ஏ-வை கௌரவிப்பது போன்றே அவருக்கு மின்வாரிய அதிகாரிகள் சார்பில் முதல் மரியாதை வழங்கப்பட்டது. எம்எல்ஏ மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காத நிலையில்,

அவர்களின் உறவினர்கள் முன்னிலையில் அரசு விழா நடைபெற்றது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted