தமிழக பணியாளர்கள் ஆந்திர சென்று வர அரசாணை!

Jul 24, 2020 12:14 PM 1087

ஆந்திராவில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் தமிழக தொழிலாளர்கள் அம்மாநிலத்துக்கு சென்று வர, அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஜப்பானிய தூதரகம், அப்போலோ டயர் உள்ளிட்ட நிறுவனத்தில் தமிழக ஊழியர்களின் பங்களிப்பு உள்ளதால் அந்நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று ஆந்திரா சென்று வர தமிழக தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், சித்தூர், ஸ்ரீ சிட்டி, நெல்லூர் ஆகிய பகுதிகளுக்கு தமிழர்கள் பலர் வேலைக்கு சென்று வருவதால் அவர்களுக்கும், ஒரு மாதத்திற்கான இ-பாஸ் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் தனிப்பட்ட முறையில் இ-பாஸ் விண்ணப்பிக்க முடியாது எனவும், நிறுவனங்கள் மூலமே விண்ணப்பிக்க முடியும் எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Comment

Successfully posted