`அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடக்கூடாது’ - முன்னாள் காதலருக்கு செக்!

Nov 21, 2020 10:22 AM 3133

நடிகை அமலாபால் உடன் நிச்சயதார்தத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட முன்னாள் காதலருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் பவ்னிந்தர் சிங் என்பருக்கும், நடிகை அமலா பாலுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் தடைபட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் அமலா பாலுக்கும் தனக்கும் திருமணம் நடைபெற்றதாக, நிச்சயதார்த்ததின் போது இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களை பவ்னிந்தர் சிங் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலா பால், பவ்னிந்தர் சிங்கிடம் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், அமலா பாலின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட பவ்னிந்தர் சிங்க்கு இடைக்கால தடை விதித்தும், மனுவுக்கு டிசம்பர் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

Comment

Successfully posted