திருப்பூரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி வெட்டப்பட்டார் - 7 பேர் கொண்ட கும்பலுக்கு காவல்துறை வலைவீச்சு!

Mar 18, 2020 03:07 PM 203

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகியை 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருமாநல்லூரை அடுத்த கணக்கம்பாளையத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ள பகவான் நந்து, திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பிகொண்டிருந்த போது, 7 பேர் கொண்ட கும்பல், பகவான் நந்துவை வழிமறித்து சராமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். வெட்டப்பட்ட பகவான்நந்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பெருமாநல்லூர் காவல்துறையினர், குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாவதாக இந்து அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன.

Comment

Successfully posted