கிறிஸ்தவ மணமகனுக்கும், இஸ்லாமிய மணமகளுக்கும் இந்து முறைப்படி திருமணம்!!

Aug 12, 2020 07:54 AM 625

கிறிஸ்தவ மணமகனுக்கும், இஸ்லாமிய மணமகளுக்கும் இந்து சம்பிரதாய முறைப்படி மேளதாளங்கள் முழங்க, அக்கினி வளர்த்து, மந்திரம் ஓதி திருமணம் நடைபெற்றது. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் கிறிஸ்தவரான அனில்குமாருக்கும், கொல்லகூடத்தை சேர்ந்த
இஸ்லாமிய பெண் ஷேக் சோனிக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காத இரு குடும்பத்தாரையும், இந்து மதத்தைச் சேர்ந்த சில நண்பர்கள் பேசி சம்மதம் பெற்று தந்தனர். திருமணம், நடக்குமா, நடக்காதா என எண்ணிய போது, நண்பர்களின் முயற்சியால், நடந்த திருமணத்தை இந்து முறைப்படி செய்து கொண்டதாக மணமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். திருமணத்தில் மும்மதத்தினரும் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted