ஹாக்கி - இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

Aug 01, 2018 02:48 PM 1386

பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி போட்டி  லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற பிளே ஆப் சுற்றில், தரவரிசையில் 10வது இடத்திலுள்ள இந்திய அணி, 17வது இடத்தில் இருக்கும் இத்தாலி அணியை எதிர்கொண்டது. போட்டியின் முதல் பாதியில் 1க்கு பூஜ்யம்  என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற இந்திய அணி,  அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து  3க்கு பூஜ்யம்  என ஆதிக்கம் செலுத்தியது. இதற்கு பதிலடி தர இத்தாலி அணி தரப்பில் எடுக்கப்பட்ட முயற்சிகளை இந்திய அணி முறியடித்தது. முடிவில் இந்திய அணி 3க்கு பூஜ்யம்  என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. நாளை நடைபெறவுள்ள காலிறுதிப்போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை சந்திக்கிறது.

Comment

Successfully posted