சிகிச்சைக்கு பணம் இல்லாததால் மனைவியை உயிருடன் புதைத்த கணவர்  

Dec 07, 2019 12:31 PM 3032

 

கோவாவில் உடல் நிலை சரியில்லாத மனைவிக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லாததால் கணவன், மனைவியை உயிருடன் புதைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.

கோவாவில் கூலித்தொழில் செய்யும் துக்காராம் ,அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். நீண்டநாட்களாக துக்காராமின் மனைவி உடல் நிலையில் சரி இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவ செலவுகளை செய்ய முடியாமல் கணவன் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக துக்காராமின் மனைவி வீட்டில் இல்லாததை பார்த்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் துக்காராமிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, மனைவிக்கு சிகிச்சையளிக்க பணம் இல்லாததால் , அவரை நீர்ப்பாசன கால்வாயின் அருகில் உயிருடன் புதைத்துவிட்டதாக கூறியுள்ளார். ஏழ்மை காரணமாக மனைவியை கணவனே உயிருடன் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted