இஸ்ரேலுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதி!

Apr 10, 2020 02:36 PM 1938

கொரோனா வைரசுக்கான மருந்துகளை ஏற்றுமதி செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் 80க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலில் உயிரிழந்த நிலையில், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3ம் தேதி பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். பின்னர் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி தடையை நீக்கிய மத்திய அரசு, சமீபத்தில் இஸ்ரேலுக்கு மருந்துகளை அனுப்பி வைத்தது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, நண்பர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், இஸ்ரேல் மக்கள் அனைவரும் மோடிக்கு நன்றி கூறிக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Comment

Successfully posted