ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய பேட்டரி கார் நாளை அறிமுகம்

Jul 23, 2019 05:14 PM 85

சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்பான மின்சார காரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கொடியசைத்து துவக்கி வைக்கிறார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசுடன் ஹூண்டாய் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டு இருந்தது. அந்த வகையில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின்சார கார்களை தயாரிக்கும் பணிகளை ஹூண்டாய் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

கோனா என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள மின்சார கார்கள் நாளை அறிமுகப்படுத்தப்படுகின்றன. முதல் காரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைக்க இருக்கிறார். மின்சார காரினை 7 மணி நேரம் சார்ஜ் செய்தால், 600 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted