12-வது ஐ.பி.எல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலப் பட்டியல் ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது

Dec 18, 2018 07:11 AM 517

12-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது. ஏலப் பட்டியலில் 346 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடக்கிறது. அப்போது, நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ஐ.பி.எல் போட்டி நடைபெறும் இடம், தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், அடுத்த சீசனுக்கான ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது. ஏலப்பட்டியலில் 346 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் இருந்து 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 36 கோடியே 20 லட்சம் ரூபாயும், டெல்லி கேப்பிட்டல் அணி 25 கோடியே 50 லட்சம் ரூபாயும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 கோடியே 95 லட்சம் ரூபாயும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 18 கோடியே 15 லட்சம் ரூபாயும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15 கோடியே 20 லட்சம் ரூபாயும் செலவிட முடியும்.

மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி 11 கோடியே 15 லட்சம் ரூபாயும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 9 கோடியே 70 லட்சம் ரூபாயும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 கோடியே 40 லட்சத்தையும், வீரர்களை வாங்க செலவிட முடியும்.

Comment

Successfully posted