ஐபிஎல் ஏலம்: தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம்

Dec 18, 2018 09:39 PM 389

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் 12 வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. 12வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 351 வீரர்களில் ஏலம் மூலமாக 70 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதுவரை 22 பேர் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஜெயதேவ் உனத்கட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், அதிகபட்மாக 8 கோடியே 40 லட்சத்துக்கு ஏலம் எடுத்தனர். அதேபோல் தென் ஆப்பிரிக்காவின் (Colin Ingram) கோலின் இங்கிராமை டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோஹித் ஷர்மா 5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஏலத்தில் எடுத்துள்ளன. 5 கோடிக்கு ஷிவம் டியூபை பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்துள்ள நிலையில் ஏலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Comment

Successfully posted