இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு!

May 28, 2020 10:21 AM 802

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 58 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 948 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 18 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 ஆயிரத்து 909 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் 15 ஆயிரத்து 257 பேரும், குஜராத்தில் 15 ஆயிரத்து 257 பேரும், ராஜஸ்தானில் 7 ஆயிரத்து 703 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 7 ஆயிரத்து 261 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 6 ஆயிரத்து 991 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, மேற்கு வங்கம், ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனிடையே, இந்தியாவில் இதுவரை 33 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted