பெட்ரோல் பங்குகள் செயல்படுவதற்கான கால நேரம் அதிகரிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

Sep 13, 2020 12:12 PM 3638

பெட்ரோல் பங்குகள் செயல்படுவதற்கான கால நேரத்தை இரவு 10 மணிவரை அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை மட்டுமே பெட்ரோல் பங்குகள் திறந்திருக்கின்றன. இந்நிலையில், பெட்ரோல் பங்குகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்குமாறு தமிழக அரசிடம் இந்தியன் ஆயில் நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து பெட்ரோல் பங்குகள் செயல்படுவதற்கான கால நேரத்தை இரவு 10 மணி வரை அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரவில் பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்கள் கூடுவதை தவிர்க்கும் நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசின் இந்த உத்தரவால் ஞாயிறு முதல் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பெட்ரோல் பங்குகள் செயல்பட உள்ளன.

Comment

Successfully posted