குமரியில் அதிகாலை முதலே இடியுடன் கனமழை -அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

Oct 16, 2018 01:25 PM 685

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 70.30 அடியாகவும், பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 27 அடியாகவும் உள்ளது. தொடர் மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Comment

Successfully posted