இந்தியாவில் ஒரேநாளில் 24,879 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

Jul 09, 2020 01:10 PM 495

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 24 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 67 ஆயிரத்து 296 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து 69 ஆயிரத்து 789 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 4 லட்சத்து 76 ஆயிரத்து 378 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில், பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 23 ஆயிரத்து 724 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 74 ஆயிரத்து 167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில், ஒரு லட்சத்து நான்காயிரத்து 864 பேரும், குஜராத்தில் 38 ஆயிரத்து 333 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 31 ஆயிரத்து 156 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேற்கு வங்கத்தில் 24 ஆயிரத்து 823 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல், தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.

Comment

Successfully posted