சென்னை வந்த இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர்கள்

Dec 13, 2019 06:59 AM 933

சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளின் வீரர்கள் சென்னை வந்தனர்.


மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று ஆடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வென்ற நிலையில் இவ்விரு அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது. இந்த நிலையில், போட்டியில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பொல்லார்ட் தலைமையிலான மேற்கு இந்திய தீவுகள் அணியும் சென்னை வந்தடைந்தனர். இதனையடுத்து இவ்விரு அணிகளின் வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த ஆட்டத்தை காண சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

Comment

Successfully posted