பிரபஞ்ச அழகி(Miss Universe) பட்டத்தை வென்ற இந்தியப்பெண்

Dec 13, 2021 05:21 PM 8596

21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார். இஸ்ரேல் நாட்டின் எய்லாட் நகரில் பிரபஞ்ச அழகிப் போட்டிகள் நடைபெற்று வந்தன.

தென்னாபிரிக்கா, பெருகுவே ஆகிய நாடுகளின் அழகிகளுடன் நடைபெற்ற கடைசி கட்ட த்ரில் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஹர்னாஸ் சாந்துவிற்கு, மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வழங்கப்பட்டது.

2020ம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெசா, ஹர்னாஸ் சாந்துவிற்கு இந்தாண்டு பிரபஞ்ச அழகி பட்டத்தை வழங்கினார்.

image

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பிறந்த 21 வயதான ஹர்னாஸ் சாந்து, இந்த பட்டத்தை வென்று, 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு பெருமையை தேடி தந்துள்ளார்.

பிரபஞ்ச அழகிப் போட்டியில் முதல் ரன்னர் அப்பாக, பராகுவே அழகியும், இரண்டவது ரன்னர் அப்பாக, தென் ஆப்பிரிக்க அழகியும் தேர்வு செய்யப்பட்டனர்.

பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்ட ஹர்னாஸ் சாந்து, கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தான் மாடலிங் துறைக்கு வந்தார். 2017ம் ஆண்டில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாடலிங் நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டு, படிப்படியாக இந்த இடத்தை அடைந்துள்ளார்.

பொது நிர்வாகத் துறையில் எம்.ஏ. பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சாந்து, இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு அழகிப் போட்டிகளில் ஏற்கனவே விருதுகளை வாங்கி இருக்கிறார்.

image

இதற்கு முன்பு, 1994 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் நடந்த மிஸ் யூனிவர்ஸ் போட்டியில், சுஷ்மிதா சென் முதன் முறையாக மிஸ் யுனிவெர்ஸ் பட்டம் வென்ற இந்திய அழகி என்ற பெருமையைப் பெற்றார்.

அதன் பிறகு, கடந்த 2000-மாவது ஆண்டு, லாரா தத்தா அந்த பட்டத்தை வென்றார். இந்த இரண்டு பேரும், அதன்பின் பாலிவுட்டில் அறிமுகமாகி சினிமா நட்சத்திரங்களாக ஜொலித்தது குறிப்பிடத்தக்கது.


Comment

Successfully posted