அந்த நயன்தாராவா இது..வைரலாகும் போட்டோ

Dec 21, 2019 06:08 PM 9159


தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டராக வலம் வருபவர் நயன்தாரா.இவர் ஐயா படத்தில் நடித்தபோது இவருக்கு இத்தனை ரசிகர் பட்டாளம் உருவாகும் என்பது யாருக்கும் தெரியவில்லை.சந்திரமுகி, கஜினி, வல்லவன், பில்லா ,வில்லு ஆகிய படங்களில் நடித்து பாராட்டை பெற்றார்.பின்பு சிறு இடைவேளிக்கு பிறகு அட்லி இயக்கத்தில் ’ராஜா ராணி’ படத்தில் வேற லெவல் எண்ட்ரி கொடுத்தார்.அது நயன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.

image

இப்படி படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுடன் விஸ்வாசம், பிகில் என அடுத்தடுத்து படம் கொடுத்துள்ளார்.சமீபத்தில் விக்னேஷ் சிவனுடன்  நயன்தாரா தனது பிறந்தநாளை நியூயார்க் சென்று கொண்டாடினர்.

image

 

அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

image
இதனை தொடர்ந்து  திருச்செந்தூர் கோயில் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்,சுசீந்திரம் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.

image

இந்நிலையில் நயன்தாராவின் இளமை பருவ புகைப்படம் வைரலாகியுள்ளது.

image

 

அதில் பலரும் அந்த நயன்தாராவா இது, லேடி சூப்பர் ஸ்டார் மாஸ், என்ன ஒரு மாற்றம், பழமை தங்கம் போன்றது ஆனால் இது சொக்க தங்கம், என பலரும் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.இதே போல் நயன்தாரா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த போது பேசிய வீடியோ வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted

Super User

Super