கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வரும் இத்தாலி !

Apr 10, 2020 02:37 PM 1946

இத்தாலியில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்த 100 மருத்துவர்கள் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள நாடுகளில் ஒன்றான இத்தாலியில்  கொரோனா பாதிப்பால் 18,200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்த நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் இத்தாலி அரசு திணறி வருகிறது. இதனால் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. அதேநேரம் கொரோனா நோயாளிகளின் உயிரைக் காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களில், சுமார் 100 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக இத்தாலி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே 30 மருத்துவ ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் நூறு மருத்துவர்கள் உயிரிழந்தது அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted