கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு

Feb 12, 2020 06:01 PM 178

புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூர் முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது வழக்கம். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி புதிய விதிகளை பின்பற்றி ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று சிறப்பாக நடைபெற்றது. ஜல்லிக்கட்டுப் போட்டியில், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் பங்கேற்றன. வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை,மாடுபிடி வீரர்கள் வீரத்துடன் அடக்கினர்.

Comment

Successfully posted