மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்

Oct 17, 2020 05:28 PM 2710

கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், இப்போது ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

28 வது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருக்கும் மகேஷ் பாபு, “சர்காரு வாரி பாட்டா” திரைப்படக்குழு அவரை வரவேற்பதாக ட்வீட் செய்துள்ளார். இதன் மூலம் தெலுங்கு இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

Comment

Successfully posted