நடனத்தில் அசத்தும் நடிகர் விஜய்யின் மகன் - வைரலாகும் வீடியோ

Aug 27, 2019 03:44 PM 1022

தமிழ் சினிமாவின் தளபதியாக கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். திரைப்படங்களில் நடிப்பு என்பதை தாண்டிலும் அவரின் அசத்தலான நடனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அடுத்ததாக விஜய்யின் நடிப்பில் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய் தனது நண்பர் ஒருவருக்கு நடனம் கற்றுக்கொடுக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. சஞ்சய் நடிகர் விஜய்யின் “வேட்டைக்காரன்” படத்தில் ஒரு பாடலிலும், சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். அந்த வீடியோவில் அவரின் முக பாவனைகளும் அப்பா விஜய் போல் அச்சு அசலாக உள்ளது.

அப்பாவை போல் நடனத்தில் அசத்தும் மகனின் வீடியோவை விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

Comment

Successfully posted