பட்டாக் கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர் கைது

Feb 16, 2020 02:18 PM 517

புதுக்கோட்டை அருகே பட்டாக் கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய, 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இட்சுகா மலைப்பட்டி பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது, பட்டாகத்தியால் அவர் கேக்வெட்டியுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பிரபல ரவுடிகள் உட்பட 45 பேர், கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையில் அங்கு சென்றபோது, அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து, பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற சுமார் 40 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், 8 பேர் ரவுடிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் சுரேஷ், தினேஷ்குமார், விக்னேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted