தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம்

Jun 23, 2019 03:40 PM 68

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தண்ணீர் சேமிப்பையும் மற்றும் தண்ணீர் சித்தனத்தையும் வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

மாரத்தான் ஓட்டத்தை சார் ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தனர். பொள்ளாச்சி சாலையில் உள்ள நகராட்சி மேல் நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த மாரத்தான், பெரியகடை வீதி வழியாக அரபிந்தோ பள்ளியை சென்றடைந்தது. இதில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், பெற்றோர், வியாபாரிகள், பொது மக்கள் உட்பட 700 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், கேடயங்களை தாராபுரம் சார்-ஆட்சியர் பவன்குமார் வழங்கினார்.

Comment

Successfully posted