விகடன் வாரப் பத்திரிகை மீது அவதூறு வழக்கு தொடர அமைச்சர் ஜெயக்குமாருக்கு அனுமதி

Feb 16, 2020 03:43 PM 582

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்ட விகடன் வாரப் பத்திரிகை மீது அவதூறு வழக்கு தொடர அமைச்சர் ஜெயக்குமாருக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்ட சுமார் 40க்கும் மேற்பட்டவர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்பு இருப்பதாக திமுக எம்.பி தயாநிதிமாறன் பொய்களை பரப்பி வந்தார்.

இதேபோல் வாரப் பத்திரிகையான விகடன், அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்டது. அமைச்சர் ஜெயக்குமார் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாக பேசிய தயாநிதிமாறன் மற்றும் அவதூறு செய்தி வெளியிட்ட விகடன் பத்திரிகை மீது வழக்கு தொடர அனுமதியளிக்குமாறு தமிழக பொதுத்துறையிடம் கோரியிருந்தார். இதையடுத்து அதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. அனுமதியை தொடர்ந்து தயாநிதிமாறன் மற்றும் விகடன் பத்திரிகை மீது அமைச்சர் ஜெயக்குமார் விரைவில் அவதூறு வழக்கு தொடர உள்ளார்.

Comment

Successfully posted