ஜெயலலிதாவின் நினைவு நாள் - அதிமுகவினர் துக்கம் அனுசரிப்பு

Dec 05, 2020 08:02 PM 511

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் மற்றும் அதிமுக கட்சி உறுப்பினர்கள் சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

திருச்சியில் கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற நினைவேந்தலில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஜெயலலிதாவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற நினைவேந்தலில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் நடைபெற்ற நினைவேந்தலில் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கொறடாவுமான வையாபுரி மணிகண்டன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திரு உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி நிர்வாகிகள் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி சட்டமன்ற அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது. இதில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு ஜெயலலிதாவின் திரு உருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற நினைவேந்தலில் மறைந்த முதலைச்சர் ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்குன் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான சண்முகநாதன் மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.

 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லுபுத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் அமைதி ஊர்வலமாக சென்று மறைந்த ஜெயலலிதாவின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Comment

Successfully posted