தென்கொரியாவிலிருந்து 1லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன!

Jul 05, 2020 07:54 PM 786

தென் கொரியாவிலிருந்து ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன.

தமிழ்நாடு மருத்துவ ஒப்பந்த கழகம் சார்பில் தென்கொரிய நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தப்படி 15 லட்சம் பிசிஆர் கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டு, அவை அனைத்து கடந்த வாரம் தமிழகம் வந்தடைந்தது. இதனை தொடர்ந்து கூடுதலாக 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், 7லட்சம் கருவிகள் தென் கொரியாவில் இருந்தும், ஒரு லட்சம் கருவிகள் ஜெர்மனியிலிருந்தும், ஒரு லட்சம் கருவிகள் அமெரிக்காவிலிருந்தும் வரவழைக்கப்படுகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் கருவிகளும் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக தென் கொரியாவிலிருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பிசிஆர் கருவிகள் அனைத்தும் அடுத்த 3 வாரங்களில் தமிழகம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted