’உனக்காக வாழ நினைக்கிறேன்’ :வைரலாகும் நயன் -விக்கி போட்டோஸ்

Dec 26, 2019 12:58 PM 2373

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டராக வலம் வருபவர் நயன்தாரா .இவர் இந்தாண்டு முன்னணி ஹீரோக்களுடன் விஸ்வாசம், பிகில் என அடுத்தடுத்து படம் கொடுத்துள்ளார்.மேலும் இவர் ரஜினியுடன் இணைந்து நடித்த ‘தர்பார்’ திரைப்படம் 2020 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.நயன் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தனது காதலருடன் நேரம் செலவிடுவதை தவிர்ப்பதில்லை.

image

ஆம்.நயன்தாரா -விக்னேஷ் சிவன் இருவரும் சமூக வலைதளங்களில் அடிக்கடி பேசப்படும் காதல் ஜோடி  என்றே கூறலாம். இருவரும் இணைந்து தங்களின் பிறந்தநாள் மற்றும் பண்டிகைக்கு போட்டொ பதிவிட்டு வாழ்த்து கூறுவது வழக்கம்.இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா உடனான போட்டோவை பதிவிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியுள்ளார்.இவர்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

image

மேலும், விக்னேஷ் சிவன்  தயாரிப்பில் நயன் நடிக்கும் ’நெற்றிக்கண்’ திரைப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Comment

Successfully posted