நயன்தாராவின் நெற்றிக்கண்!

Jul 29, 2021 02:46 PM 8300

விக்னேஷ் சிவன் தயாரிப்பில், மிலிந்த் ராவ் இயக்க நயன்தாரா நடித்துள்ள படம் ‘நெற்றிக்கண்’. ‘ப்ளைண்ட்’ என்ற கொரியப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் படமான இதில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்து வரும் இந்த படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வருகிற ஆகஸ்ட் 13-ம் ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நெற்றிக்கண் படத்தின் முதல் பாடலான ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இன்று வெளியான ட்ரைலரால் நயனின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

அடுத்து என்ன நடக்கும்... என்கிற ஒரு வித ஈர்ப்பையும், பரபரப்போடும் இருக்கும் இந்த ட்ரைலர் நிச்சயம் ஆக்ஸ்ட் - 13ம் தேதி அனைவரையும் ஒடிடி தளத்தைன் பக்கம் இழுக்கும் என்பதில் ஐயமில்லை .

Comment

Successfully posted