சென்னைக்கு திங்கள்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் - தமிழக அரசு அறிவிப்பு!

Jul 05, 2020 08:58 PM 12710

சென்னையில் இன்றுடன் முழு ஊரடங்கு முடியும் நிலையில், திங்கட்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி, உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், ஆன்லைன் உணவு சேவைக்கு இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்சல் வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகம் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற செயல்பாடுகளை பொறுத்த வரை, ஜூன் 19ம் தேதிக்கு முந்தைய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது. 

Comment

Successfully posted